குற்றமிழைத்தவர்கள் பாதுகாப்பு படைப்பிரிவில் எத்தகைய உயர்நிலையில் இருந்தாலும், தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று, புதிய கடற்படைக் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னைய்யா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு படையினர் தங்களின் உத்தியோகபூர்வ சீருடையைப் பயன்படுத்திக் கொண்டு குற்றங்களைப் புரிய அனுமதிக்க முடியாது.
யாராக இருந்தாலும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களின் ஊடாக விசாரிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
அவர் எந்த பதவியில், எவ்வளவு உயர் நிலையில் இருந்தாலும், இந்த விடயத்தில் சலுகைகள் இல்லை என்று வைஸ்ட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னைய்யா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு கிழக்கில் மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாவதற்கான எந்த சூழ்நிலையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது போர் நிறைவடைந்து முழுமையான சமாதானத்தை நோக்கி நகரும் காலப்பகுதியில் இலங்கை இருப்பதாகவும், இதற்கு ஏற்றாற்போல் பாதுகாப்பு படையினர் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இலங்கை, இந்திய கடற்பரப்பின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் புதிய நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் ட்ரெவிஸ் சின்னைய்யா கூறியுள்ளார்.

Post a Comment