Ads (728x90)

 இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அரச குடும்பத்தினர், லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் வசித்து வருகின்றனர். தற்போது, கோடை விடுமுறைக்காக அவர்கள் ஸ்காட்லாந்து பால்மோரல் பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் அரண்மனை அருகே, ஒரு காரில் வந்த வாலிபர் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த 2 போலீஸ் அதிகாரிகளை கத்தியால் குத்தினான். இதையடுத்து விரைந்து வந்த மற்ற போலீசார் அவனையும், அவனிடம் இருந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர். இந்த தாக்குதலில் 2 போலீசாருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.  இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, கைது செய்யப்பட்ட 26 வயது வாலிபரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget