ஹஜ் கடமையை நிறைவேற்ற லட்சக்கணக்கான மக்கள் மெக்காவில் திரண்டுள்ளனர். புனித கஃபா ஆலயத்தில் இரவு தொழுகையை நிறைவேற்ற அவர்கள் குழுமியதால் மெக்கா நகரமே மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ஹஜ் பயண காலம் இது. நாடு, நிறம், மொழிகளை கடந்து 30 லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் மெக்காவில் திரண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றனர். இந்த 30 லட்சம் பேரும் ஏற்கனவே மெக்கா வந்தடைந்துவிட்ட நிலையில், அவர்கள் அனைவரும் இரவு தொழுகையில் ஈடுபட்டனர்.
இறைபக்தி கமழும் அந்த பிரம்மாண்ட காட்சிகளின் வீடியோ வெளியாகியுள்ளது. மெக்கா வற்துள்ள லட்சக்கணக்கான புனித பயணிகள் கஃபா ஆலயத்திலும், மெக்காவை சுற்றியுள்ள முஸ்தலிபா உள்ளிட்ட இடங்களிலும் தங்கி ஹஜ் கடமையை நிறைவேற்றுவார்கள். அந்த தருணத்தில் உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்கள், ஹஜ் பெருநாள் எனப்படும் தியாக திருநாளை கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு வரும் 2-ம் தேதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment