அமெரிக்காவில் மருத்துவமனையில் பணியாற்றும் பெண்ணுக்கு லாட்டரியில் இந்திய மதிப்பில் ரூ.4,869 கோடி ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.
அமெரிக்காவில் மசாசூசெட்ஸில் மருத்துவமனையில் குமாஸ்தாவாக பணியாற்றிய மாவிஸ் வாங்சிக் (53) என்ற பெண்ணுக்கு பவர்பால் லாட்டரியில் 758.7 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு விழுந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.4,869 கோடி.
பரிசுத் தொகையை மாவிஸ் வாங்சிக் மொத்தமாக வாங்கிக் கொள்ளாமல் சிறிது சிறிதாக வாங்கிக் கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி, அவருக்கு வரிபோக இந்திய மதிப்பில் ரூ.2,114 கோடி முதல் தவணையாக பெற்றுக் கொள்கிறார்.

Post a Comment