இலங்கை அணி மீது பாகிஸ்தானில் 2009ஆம் ஆண்டில் வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நாடுகள் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட மறுத்தன. பாகிஸ்தான் அணி கிரிக்கெட் நிர்வாகமும், தங்களது போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்திக்கொண்டிருந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், அந்நாட்டில் இருக்கும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த கேள்விகளை களையும் விதமாகவும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட 'உலக பதினொருவர்' (வேர்ல்ட் லெவன்)அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாட இருக்கிறது.
பாகிஸ்தானுடன் விளையாடவிருக்கும் உலக லெவன் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தென்னாபிரிக்க அணியின் தற்போதைய தலைவர் டு பிளெஸிஸ் 'உலக லெவன்' அணிக்குக் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இலங்கை அணியிலிருந்து திஸர பெரேரா இந்தத் தொடரில் விளையாடுகிறார். இந்தப் போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12, 13 மற் றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
உலக லெவன் அணி,
டு பிளெஸிஸ் (தெ.ஆ), அம்லா (தெ.ஆ.), சாமுவேல் பத்ரி (மே.இ.தீ), ஜார்ஜ் பெய்லி (ஆஸி.), கொலிங்வுட் (இங்கிலாந்து), பென் கட்டிங் (ஆஸி.), கிராண்ட் எலியாட் (நியூஸி.), தமீம் இக்பால் (பங்களாதேஷ்), டேவிட் மில்லர் (தெ.ஆ.), மோர்னே மோர்கல் (தெ.ஆ.), டிம் பைன் (ஆஸி.), திஸர பெரேரா (இலங்கை), இம்ரான் தாஹிர் (தெ.ஆ.), டேரன் சமி (மே.இ.தீ.).
Post a Comment