Ads (728x90)

பெயிண்ட் பிரஷ் கிராபிக்ஸ் அப்ளிகேஷனை நிரந்திரமாக நீக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பெயிண்ட் பிரஷ் என்ற பெயரில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் கடந்த 1985ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெயிண்ட் அப்ளிகேஷன் படங்கள் வரைவதற்கும், புகைப்படங்களை எடிட் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த 32 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் இந்த பெயிண்ட் கிராபிக்ஸ் அப்ளிகேஷன் இனிமேல் வெளிவரும் அப்டேட்களில் இருந்து நிரந்திரமாக நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்டோஸ் 10 மாடல்களில் பெயிண்ட் பிரஷ் அப்ளிகேஷன்கள் இடம்பெறவில்லை.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 கிரியேட்டர்ஸ் அப்டேட்டில் அந்நிறுவனம் 3D பெயின்ட் அறிமுகம் செய்திருந்தது. புதிய 3D பெயிண்ட் செயலியில் பழைய பெயிண்ட் செயலியில் வழங்கப்பட்ட பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. 3D பெயிண்ட் செயலியில் 3D பொருட்களை சேர்க்க வழி செய்கிறது. 

என்ன தான் புதிய செயலியானாலும் பல ஆண்டுகளாய் பயன்படுத்தப்பட்டு வரும் பெயிண்ட் நீக்கப்படுவது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் எளிமையாய் பயன்படுத்தக் கூடிய செயலியாக இருக்கும் பெயிண்ட் இன்று வரை அனைவரும் பயன்படுத்தக் கூடிய டிராயிங் செயலியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget