Ads (728x90)

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் போராடி தோற்ற இந்தியா வீராங்கனை சாய்னா நெஹ்வால் வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.அரை இறுதியில் ஜப்பானின் நஸோமி ஓகுஹராவுடன் நேற்று மோதிய சாய்னா 21-12 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஓகுஹரா 21-17 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஜப்பான் வீராங்கனை 12-21, 21-17, 21-10 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி ஒரு மணி, 14 நிமிடத்துக்கு நீடித்தது. கடந்த 2015ல் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த சாய்னா, இம்முறை வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். மற்றொரு அரை இறுதியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து, சீனாவின் சென் யூபெய்யுடன் மோதுகிறார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget