Ads (728x90)

அஜீத் நடித்து வெளியாகியுள்ள விவேகம் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வசூல் சாதனை புரிந்து வருகிறது. அதோடு, இந்த படத்தின் மைனஸ்களை சுட்டிக்காட்டி விமர்சிப்பவர்களுக்கு சில சினிமாத்துறையினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதுகுறித்து கோலிசோடா விஜய் மில்டன் கூறுகையில், ஒரு படத்தை எடுப்பது என்பது ஒரு குழந்தை பெற்றெடுப்பது போன்றது. ஆனால் அப்படி நாங்கள் பெற்றெடுக்கும் படத்தை தாறுமாறாக விமர்சித்து விடுகிறார்கள் என்று சில விமர் சகர்களை சாடியுள்ளார்.

ஆனபோதும், இந்த எதிர்மறையான விமர்சனங்களையெல்லாம் தாண்டி வசூல் சாதனை புரிந்து வருகிறது அஜீத்தின் விவேகம். அந்த வகையில் சென்னை பாக்ஸ் ஆபீசில், ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி படங்களின் முதல்நாள் வசூல் சாதனையை விவேகம் படம் முறியடித் துள்ளது. அதாவது, கபாலி 1.12 கோடியும், தெறி படம் 1.05 கோடியும் வசூலித்திருந்த நிலையில், இப்போது விவேகம் 1.21 கோடி வசூலித்து முதலிடம் பிடித்திருக்கிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget