இருந்தாலும் அவருக்கு தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. 'காஷ்மோரா' படத்திற்குப் பிறகு கோகுல் இயக்க உள்ள 'ஜுங்கா' படத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா ஜோடிகளாக நடிக்கின்றனர். 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் மூலம் விஜய் சேதுபதியை வேறு ஒரு தளத்தில் காட்டிய இயக்குனர் கோகுல், விஜய் சேதுபதி மீண்டும் இணைய உள்ள இந்தப் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஆரம்பமாகிவிட்டது.
'காஷ்மோரா' படம் தோல்வியடைந்தாலும் கோகுல் அடுத்த பட வாய்ப்பை உடனே கைப்பற்றிவிட்டார். அவருக்கு தக்க சமயத்தில் விஜய் சேதுபதியும் கைகொடுத்துள்ளார். இந்த 'ஜுங்கா' வில் கோகுல் ஏமாற்ற மாட்டார் என நம்புவோம்.
Post a Comment