சிம்புவுடன் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு விக்ரமுடன் ஸ்கெட்ச் படத்தில் நடித்துள்ள தமன்னா, அதையடுத்து சக்ரி டோல்டி இயக்கத்தில் கொலையுதிர்காலம் படத்தில் இந்தி பதிப்பான காமோஷி படத்தில் நடித்துள்ளார். தேவி படத்தைப்போலவே இந்த படத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தற்போது தெலுங்கில் குணால் கோஹ்லி இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் லீடு ரோலில் நடிக்கிறார் தமன்னா. இந்த படத்தில் கல்யாண் ராம் நாயகனாக நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படி கதையின் நாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்திருப்பதால் இந்த படங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து நடித்து வரும் தமன்னா, இதன்பிறகு நயன்தாரா, திரிஷா போன்று தனக்கென ஒரு வியாபார வட்டம் உருவாகும் என்றும் எதிர்பார்க்கிறாராம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment