Ads (728x90)

கடந்த 2, 3 ஆண்டுகளாகவே டென்னிஸ் ரசிகர்களின் மனதை அலைபாய வைத்துக் கொண்டிருப்பவர்களில் முதன்மையானவர் கனடாவின் யூஜெனி பவுச்சார்ட். ஜெனி என்று செல்லமாக அழைக்கிறார்கள். இவர் வீசும் ஏஸ் சர்வீஸ்களைப் போலவே, பார்வையில் ரசிகர்களை துளைக்கும் வீராங்கனை.

 வயது 23. சரி... விளையாட்டுல எப்படின்னு கேட்கறீங்களா...? டென்னிஸ்ல இவர் இதுவரை பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ரேங்கிங்ல கூட 70வது இடத்தில்தான் இருக்கிறார். 2014 விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ரன்னர். அதே ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபனில் அரையிறுதி வரை முன்னேறினார்.

2012ல் ஜூனியர் விம்பிள்டன் போட்டியில் சாம்பியன். ஹாப்மேன் கோப்பையை பெற்றதுதான் இவரது முதல் முக்கிய டைட்டில். மொத்தம் ஒரு டபிள்யூ.டி.ஏ மற்றும் 6 ஐடிஎப் கோப்பைகளை பெற்றுள்ளார். 169 வெற்றிகள், 94 தோல்விகள். இதுதான் இவரது டென்னிஸ் ரெக்கார்டு. ஆனாலும், அழகுதான் இவரது கொடியை உயர உயர பறக்க வைக்கிறது.

மாடலிங் உலகில் இவர் பட்டையை கிளப்பி வருகிறார். டென்னிசில் வருவதை விட பல மடங்கு வருமானம் மாடலிங் மூலமே இவருக்கு கிடைக்கிறது. எப்படியும் ஆண்டு வருமானம் ₹50 கோடியை தாண்டும் என்கின்றனர்.

முன்பு கேப்ரிலா சபாட்டினி டென்னிஸை விட, மாடலிங் மூலமே பெரிய அளவில் முன்னேறினார். தற்போது இவரது இடத்தை ஜெனி நிரப்பி வருகிறார் என்கிறார்கள். ரசிகர்களுக்கு கவலை தரும் செய்தி இதுதான்...இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறதாம்... சில மீடியாக்கள் ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும் எழுதி வருகின்றனர். பிரபலமான ‘ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட்’ இதழுக்காக ‘பிகினி’ உடை அணிந்து இவர் கொடுத்த போஸ் ரசிகர்களை கிரங்கடித்து வருகிறது. 

இதற்கான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அனல் கிளப்புகிறார் ஜெனி!அடுத்ததாக ரஷ்யாவின் மரியா ஷரபோவா... பார்க்க வயது 16 போல தோன்றினாலும், டென்னிஸ் அரங்கில் களமிறங்கியே 16 ஆண்டுகள் ஆகி விட்டன என்பதையும் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். தற்போது இவரது வயது 30. 2005ல் ரேங்கிங் பட்டியலில் நம்பர் 1 என்ற நிலையில் இருந்தார். 

தற்போதைய ரேங்கிங் தெரியுமா? 148. அடேங்கப்பா... ஆனால், டென்னிஸ் அரங்கில் இவரது அழகுக்கு ஒரு பெரும் ரசிகர் கூட்டமே இருக்கிறது. துறுதுறு பார்வை, பந்தை நேர்த்தியாக திருப்பி அனுப்பும் ஸ்டைல், ஒல்லியான தேகம்,  ஆறடியை தாண்டிய உயரம் (6.2), அவரது முடி கோதி விடும் அழகு, எதற்கும் அலட்டிக்கொள்ளாத மனோபாவம்... இவைதான் ரசிகர்களுக்கு இவரிடம் பிடித்த விஷயங்கள்.

பெரிய தோல்வி அடைந்த அடுத்த நாள், பிரபல பத்திரிகையில் ஒரு அட்டகாசமான போஸ் கொடுப்பார் பாருங்கள்... ஆடிப்போய் விடுவார்கள் ரசிகர்கள். அவரது தோல்வி பற்றிய பேச்சே ஒரேயடியாக காணாமல் போய்விடும். உலகின் செக்ஸியான டென்னிஸ் வீராங்கனைகள் பட்டியலில் இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் -5ல் தான் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக முதல் மற்றும் 2வது இடத்தில் இருக்கிறார். விளையாடிய 80% ஆட்டத்தில் வென்றிருக்கிறார். மொத்த வெற்றிகள் 606. தோல்வி 148. இதுவரை ஆஸ்திரேலியன் ஓபன் (2008), பிரெஞ்ச் ஓபன் (2012,2014), விம்பிள்டன் (2004), யு.எஸ். ஓபன் (2004) என முக்கிய பட்டங்களை வென்றுள்ளார். 

செரினா, வீனஸ் வில்லியம்சுக்கு சரியான ேபாட்டியாக விளங்கியவர். இவரது பீச் ஸ்டில்கள் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றிருக்கும்.  முக்கிய போட்டிகளில் இவர் பெற்ற பரிசுத்தொகை 30 கோடியை தாண்டும் என்றால், விளம்பரம் மூலம் பெற்றது ₹300 கோடியை தாண்டும் என்ற தகவல் மெர்சல் ஆக்குகிறது. இவர்கள் இருவர் மட்டுமல்ல... 

முன்னணி வீராங்கனைகள் கரோலினா பிளிஸ்கோவா (செக்.), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), எலினா வெஸ்னினா (ரஷ்யா), கார்பினி முகுருசா (ஸ்பெயின்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோருக்கும் கணிசமான ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஆக... டென்னிசை பொறுத்தவரை திறமை ஒரு பக்கம் இருந்தாலும்... அன்று முதல் இன்று வரை அழகும் ஒரு முக்கிய பங்கு வகிப்பதை மறுப்பதற்கில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget