நடிப்பு: தனுஷ், கஜோல், அமலாபால், சமுத்திரகனி, விவேக், சரண்யா
ஒளிப்பதிவு: சமீர் தாகிர்;
இசை: ஷான் ரோல்டன்
தயாரிப்பு: வி.கிரியேஷன்ஸ், வொண்டர்பார் பிலிம்ஸ்
இயக்கம்: சவுந்தர்யா ரஜினிகாந்த்
முதல் பாகத்தில் வேலையில்லாமல் சுற்றிக்கொண்டிருந்த தனுஷ், இந்த கதையில் ஒரு நல்ல கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்தியாவின் சிறந்த இன்ஜினியராக விருது பெறும் தனுஷை தனது கம்பெனியில் பணியமர்த்த விரும்புகிறார் பிரபல தொழிலதிபர் கஜோல்.
ஆனால் அவர் கம்ெபனியில் வேலை செய்ய விருப்பமில்லை என்கிறார் தனுஷ். இதற்கிடேயே கஜோல் எடுக்க இருந்த ஒரு பெரிய புராஜக்டை தன் சமார்த்தியத்தால் தன் கம்பெனிக்கு பெற்றுத் தருகிறார் தனுஷ். இது கஜோலுக்கு அடுத்த கோபத்தை தருகிறது. ‘உன்னை என் கம்பெனியில் வேலை கேட்டு நிற்க வைக்கிறேன்’ என சவால் விடுகிறார் கஜோல். பண பலம், அதிகார பலத்தை பயன்படுத்தி தனுஷை மீண்டும் வேலையில்லா பட்டதாரியாக்குகிறார்.
தனுஷ் மீண்டும் திமிறி எழுந்து எப்படி அவரை வெல்கிறார் என்பதுதான் கதை. தனுஷுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரியான கேரக்டர் ஊதிவிட்டுப்போகிறார். கஜோலோடு வார்த்ைதகளால் மோதும் காட்சிகளில் தியேட்டரில் விசில் பறக்கிறது. ‘உங்ககிட்ட இருக்கிறது வெறும் சிமென்டுதான் எங்கிட்ட இருக்கிறது மாஸ்’ என பன்ஞ் டயலாக் அடிக்கிறார்.
வீட்டுக்கு வந்தால் மனைவிக்கு பயப்படும் கணவனாய் அப்படியே தலைகீழாக மாறிவிடுகிறார். தண்ணியடித்துவிட்டு வீட்டுக்கு வருதும்போது லந்து பண்ணுவதும். மறுநாள் காலையில் ‘அப்படியெல்லாமா பண்ணினேன்’ என அப்பாவியாக மாறுவதும் செம கலாட்டா. பொறுப்புள்ள, கண்டிப்பான மனைவியாக அமலாபால். கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார்.
சமுத்திரகனி பிராக்டிக்கலான அப்பாவாக நிறைவாய் இருக்கிறார். முதல் பாகத்தில் இறந்து போன சரண்யா இதில் தனுஷின் இமாஜினேஷனாக வருகிறார். தனுஷின் நண்பராக வந்து சிரிக்க வைக்கிறார் விவேக். படத்தின் பவர்புல் கேரக்டர் கஜோலுக்கு. ரீ என்ட்ரியை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஸ்டைலிலும், அழகிலும் ‘மின்சாரே கனவு’ கஜோலை பார்க்க முடிகிறது. நுனிநாக்கு ஆங்கிலத்தில் தனுஷுடன் மோதும் காட்சிகளில் புருவத்தை உயர்த்தி அவர் கொடுக்கிற லுக் கேரக்டருக்கு இன்னும் வலு சேர்க்கிறது.
ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்துக்கு விறுவிறுப்பு கூட்டினாலும் பாடல்கள் முதல் பாகத்தின் ரேஞ்சை தொடவில்லை. சமீரின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். சென்டிமென்ட், ஆக்ஷன், மெசேஜோடு, திருக்குறளையும் பயன்படுத்தி நிறைவான ஒரு படம் தர முயற்சித்திருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
தனுஷ், கஜோல் மோதல்தான் படத்தின் ஹைலைட். ஆனால் அந்த மோதலும், வேகமும் முன்பகுதியுடன் முடிந்து போகிறது. பின்பகுதி, காட்சிகளின் அடுக்காகவே நகர்கிறது. பாடல்கள் கதையுடன் ஒட்டாத திணிப்பாக இருக்கிறது. ஹீரோவுக்கு எதிரி ஒரு பெண் என்பதால் சென்டிமென்டாக கிளைமாக்சை வடிவமைத்தது சரி. ஆனால் லாஜிக் மீறல் நெருடல்.
எந்த பிடிமானமும் இல்லாமல் ஒரு இன்ஜினியர் பின்னால் ஆயிரம் இன்ஜினியர்கள் திரண்டு நிற்பதெல்லாம் சினிமாவில்தான் சாத்தியம். பின்பகுதி திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
Post a Comment