புகைப்படத்தால் கடும் அப்செட்டில் திரிஷா
பதினைந்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடிகையாக கலக்கிவருபவர் திரிஷா. அவர் தற்போது சதுரங்க வேட்டை 2, மோகினி, 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதியோடு அவர் நடிக்கும் 96 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு குழந்தையுடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் நேற்று லீக் ஆனது.
இந்த படத்தில் திரிஷா டீச்சராக நடிப்பதாக கூறப்படும் நிலையில் படத்தில் அவரது தோற்றம் லீக்கான புகைப்படத்தால் வெளியானது.
இதை பார்த்து அதிர்ச்சியான திரிஷா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, "நான் ரசிகர்கள் மீது வைத்துள்ள அன்பால் அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். என் தோற்றத்திற்காக கஷ்டப்பட்டு பணியாற்றிய இயக்குனருக்கு அது அவமரியாதை செய்வது போலாகிறது" என தெரிவித்துள்ளார்
Post a Comment