Ads (728x90)

எதிர்வரும் 15 ஆண்டுகளுக்குள் இலங்கையை சிங்கப்பூராக தரமுயர்த்துவதற்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என சீனா அறிவித்துள்ளது.
தங்களையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கைக்கான சீன தூதுவர் யி ஷியான்லியாங் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“சீனாவின் மிக சிறந்த நண்பன் இலங்கை. இரு நாடுகளுக்கும் இடையில் 70 ஆண்டுகளாக நட்பு தொடர்கின்றது.
கடந்த சில ஆண்டுகளாக சீனா தனது அனைத்துலக உதவியில் அதிகளவு பங்கை இலங்கைக்கு வழங்கி வருகிறது.
நாட்டை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்திற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இதேவேளை, ஷங்காய் நகரத்தைப் போன்று இலங்கையின் தென்பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு, சீனா தொடர்ந்தும் உதவிகளை செய்யும்”
என அவர் கூறியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget