Ads (728x90)

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­து­டன் தொடர்­பு­டைய வழக்­கு­கள் நீதி­மன்­றத்­தில் நிலு­வை­யில் உள்ள 84 பேர் இன்­ன­மும் சிறைச்­சா­லை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று அரசு தெரி­வித்­துள்­ளது.
இது தொடர்­பாக அரச தலை­வ­ரின் ஊட­கப் பிரிவு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்ட மேலும் 12 பேர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­காக, சட்­டமா அதி­பர் திணைக்­க­ளம் பொலிஸ் விசா­ரணை அறிக்­கை­களை ஆராய்ந்து வரு­கி­றது.
முன்­னாள் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் லக்ஸ்­மன் கதிர்­கா­மர் படு­கொலை, முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­தா­பய ராஜ­பக்­சவை படு­கொலை செய்ய மேற்­கொள்­ளப்­பட்ட முயற்சி, முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச மற்­றும் ஏனைய முக்­கிய பிர­மு­கர்­கள் மீது தற்­கொ­லைத் தாக்­கு­தல் நடத்­து­வ­தற்­கான முயற்சி.
 முன்­னாள் அமைச்­சர் ஜெய­ராஜ் பெர்­னான்டோ புள்ளே படு­கொலை, முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி பீல்ட் மார்­சல் சரத் பொன்­சேகா மீதான படு­கொலை முயற்சி, அநு­ரா­த­பு­ர­வில் மேஜர் ஜென­ரல் ஜானக பெரேரா உள்­ளிட்ட 29 பேர் தற்­கொலை குண்­டுத் தாக்­கு­த­லில் கொல்­லப்­பட்­டமை போன்ற சம்­ப­வங்­க­ளுக்கு  சூழ்ச்சி செய்­தமை, உதவி செய்­தமை, உடந்­தை­யாக இருந்­தமை, ஆகிய குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பான வழக்­கு­களே தற்­போது விசா­ர­ணை­யில் இருப்­ப­தா­க­வும் அந்த அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget