Ads (728x90)

பொருத்து வீட்­டுக்கு கொடுத்த விண் ணப்­பங்­களை மீளப்­பெற்று, கல் வீட் டுக்கு மக்­கள் விண்­ணப்­பிக்­க­ வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அழைப்பு விடுத்­துள்­ளது. 50 ஆயி­ரம் கல் வீடு­கள் அமைக்­குப் பணி விரை­வாக நடை­பெற வேண்­டும் என்­றும் அது வலி­யு­றுத்­தி­யுள்­ளது.
தேசிய ஒன்­றி­ணைப்பு மற்­றும் நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடாக வடக்கு – கிழக்­கில் 50 ஆயி­ரம் கல் வீடு­களை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
போர் முடிந்த 2009ஆம் ஆண்டு, வடக்கு – கிழக்கு மக்­க­ளின் வீட்­டுத் தேவை­யைப் பூர்த்தி செய்­யு­மாறு அப்­போ­தைய அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வி­டம் கோரி­னோம். அவர் கைவி­ரித்து விட்­டார்.
அத­னால் இந்­தி­யா­வுக்­குச் சென்ற கூட்­ட­மைப்பு, அந்த நாட்டு அர­சி­டம் இதே கோரிக்­கையை முன்­வைத்­தது. அதனை ஏற்­றுக் கொண்டு இந்­திய அரசு வடக்கு – கிழக்­கில் 44 ஆயி­ரம் கல் வீடு­களை கட்­டித் தந்­துள்­ளது.
இதன் பின்­ன­ரும் வடக்கு – கிழக்­கில் வீட்­டுத் தேவை இருந்­தது. மீள்­கு­டி­யேற்ற அமைச்சு 65 ஆயி­ரம் பொருத்து வீடு­களை அமைத்­துத் தரு­வ­தா­கத் தெரி­வித்­தது. இதில் ஒரு பொருத்து வீட்­டுக்­கான செல­வில் 3 கல் வீடு­கள் கட்ட முடி­யும் என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டி­னோம்.
பொருத்து வீட்­டுக்­கான செலவு குறைக்­கப்­பட்­டது. ஆனால் அந்­தப் பெறு­ம­தி­யில்­கூட இரண்டு வீடு­கள் கட்ட முடி­யும் என்­ப­தைத் தெரி­வித்து பொருத்து வீட்டை எதிர்த்­தோம்.
ஊழல் நிறைந்த பொருத்து வீட்டை மக்­கள் ஏற்க்­கா­விட்­டால் வீடே கிடைக்­காது என்ற தோற்­றப்­பாடு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில்­தான், வடக்கு – கிழக்­கில் 50 ஆயி­ரம் கல் வீடு அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தான அறி­விப்பு வெளி­வந்­துள்­ளது.
பொருத்து வீட்­டுக்கு விண்­ணப்­பித்த மக்­கள் அந்த விண்­ணப்­பங்­களை மீளப் பெற்று கல் வீட்­டுக்கு விண்­ணப்­பிக்­கு­மாறு கேட்­டுக் கொள்­கின்­றேன் – என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget