சமகாலத்தில் பொக்கிஷமாகப் பார்க்கப்படும் “கச்சா எண்ணெய்” இலங்கையின் மன்னார் கடல்படுக்கையில் காணப்படுகின்றது.
இந்த நிலையில், இலங்கையின் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபடுவதற்கு பன்னாட்டு நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம், சாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கும் போது,
“மன்னார் கடல் படுக்கையில் உள்ள 13 துண்டங்களில், 8 துண்டங்களில் அகழ்வை மேற்கொள்வதற்கு, 8 வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன.
இந்த விடயம் வெற்றியளித்தால் இலங்கைக்கு நன்மையாக அமையும்” எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment