சுற்றுலா நுழை விசாவில் இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 27 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர் என்று குடிவரவு, குடியகல்வுத் திணைக் களம் தெரிவித்தது.
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கண்காணிப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவும் கடந்த சில நாள்களில் நடத்திய தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 பேர் சாஸ்திரம் கூறும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஏனைய 6 பேர் புடைவை வியாபார நோக்கில் தங்கியிருந்துள்ளனர். இரண்டு பேர் வியாபார நிலையங்களில் தொழில் புரிந்து வந்துள்ளனர் என்றும் அந்தத் திணைக்கம் குறிப்பிட்டது.
Post a Comment