Ads (728x90)

ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்க வேண்டாம். அரசு விடுதிகளில் தங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களைச் பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.
டெல்லியில் கடந்த புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு அமைச்சர்களை அழைத்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, அரசு ஒதுக்கியுள்ள இடங்களில் தங்குவதற்கு பதிலாக சில அமைச்சர்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது குறித்து மோடி கடும் அதிருப்தி தெரிவித்தார்.
அரசு பணிகள் தொடர்பாக செல்லும்போது அரசு விடுதிகளில் தங்க வேண்டுமென்றும் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதை தவிர்க்குமாறும் அமைச்சர்களுக்கு மோடி அறிவுறுத்தினார்.
தங்கள் துறைகளின் கீழ் வரும் அரசு பொதுத் துறை நிறுவனங்களின் வாகனங்களை அமைச்சர்கள் தங்கள் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களை அமைச்சர்களோ அவர்களது குடும்பத்தாரோ முறைகேடாக பயன்படுத்திக் கொள்வதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்றும் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
மத்திய அமைச்சகங்கள் அளிக்கும் சலுகைகளை அமைச்சர்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் ஊழலுக்கு எதிராக சமரசமே செய்து கொள்ள மாட்டேன் என்றும் பிரதமர் கூறியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மோடியின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து , அரசு வாகனங்களைச் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பல அமைச்சர்கள் தங்கள் உதவியாளர்களுக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், ஊழலற்ற மத்திய அரசு என்ற மதிப்பை தக்க வைத்துக் கொள்வதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

Recent News

Recent Posts Widget