Ads (728x90)

சிறைச்­சா­லை­யில் தனி அறை­யில் அடைத்து வைத்தி ருப்­ப­தால் நான் மன­அ­ழுத்­தத்­துக்கு உள்­ளா­கி­றேன்.” இவ்­வாறு நீதி­மன்­றில் தெரி­வித்­தார், நீதி­பதி இளஞ் செ­ழியன் மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்­திய குற்­றச்­சாட்­டில் விளக்­க­ம­றி­ய­லில் உள்ள முதன்­மைச் சந்­தே­க­ந­ப­ரான ஜெயந்­தன்.
யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கு யாழ்ப்பாண நீதிவான் மன்றில் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. முதன்மைச் சந்தேகநபர் உள்ளிட்ட 3 சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களின் விளக்கமறியலை நீடித்து நீதிவான் வழக்கேட்டில் திகதியிட்டார்.
அப்போது ஜெயந்தன் கையை உயர்த்தி, “சிறைச்சாலையில் என்னைத் தனி அறையில் வைத்திருக்கின்றார்கள். அதனால் நான் மனஅழுத்தத்துக்கு உள்ளாகிறேன்” என்று தெரிவித்தார். தன்னைத் தனி அறையில் அடைக்க வேண்டாம் என்று கோருவதாக அவரது கோரிக்கை அமைந்தது. எனினும் நீதிவான் அவரது கோரிக்கையைப் பரிசீலிக்கவில்லை. அவர் உள்ளிட்ட மூவருக்கும் எதிர்வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
நல்லூரடியில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் கேமரத்ன உயிரிழந்தார். மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget