Ads (728x90)

2009ஆ-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று விளை­யா­டிய போது மைதா­னத்­துக்கு செல்லும் வழியில் அணி பயணித்த பஸ் மீது தீவி­ர­வா­திகள் துப்­பாக்­கியால் சுட்டு திடீர் தாக்­குதல் நடத்­தி­னார்கள். இதில் இலங்கை வீரர்கள் காயத்­துடன் உயிர் தப்­பி­னார்கள்.
அதன் பிறகு பெரிய அணிகள் எதுவும் பாகிஸ்தான் சென்று விளை­யா­ட­வில்லை. கடந்த 2015ஆ-ம் ஆண்டில் சிம்­பாப்வே அணி மட்டும் ஒரு முறை சென்று விளை­யா­டி­யது. எல்லா அணி­களும் செல்ல மறுப்­பதால் பாகிஸ்தான் அணியின் சர்வதேச போட்டிகள் அனைத்தும் பொது­வான இட­மான ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் நடத்­தப்­பட்டு வரு­கி­ன்றன.
பாகிஸ்­தானில் மீண்டும் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டியை நடத்த அந்த நாட்டு கிரிக்கெட் சபை தீவிர நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது. 
இதன் ஒரு அங்­க­மாக எதிர்­வரும் செப்­டம்பர் மாதத்தில் சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சிலின் (ஐ.சி.சி.) உலக லெவன் அணி பாகிஸ்­தானில் சுற்­றுப்­ப­யணம் செய்து 3 போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 போட்டித் தொடரில் விளை­யாட சம்­ம­தித்­துள்­ளது. 
அதே மாதத்தில் இலங்கை அணி லாகூரில் ஒரே ஒரு இரு­ப­துக்கு 20 போட்­டியில் விளை­யாட முடிவு செய்­துள்­ளது.
இந்­நி­லையில் மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, எதிர்­வரும் நவம்பர் மாத இறு­தியில் பாகிஸ்தான் சென்று 3 இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டிகளில் விளை­யா­ட­வுள்­ள­தாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget