நாட்டின் 70 ஆண்டுகால தனிக்கட்சி அரசியலில் செய்ய முடியாததை தேசிய அரசாங்கத்தில் முன்னெடுக்கவே கூட்டாட்சி அரசாங்கத்தை அமைத்தோம். எனினும் தேசிய அரசாங்கத்திலும் எதிர்பார்த்ததை செய்ய முடியவில்லை. சர்வதேச தேவைக்காகவே இந்த அரசாங்கமும் இயங்குகின்றது என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ தெரிவித்தார்.
சர்வதேச விசாரணைக்கு நான் தடையாக உள்ளதாலேயே என்னை இலக்கு வைத்துள்ளனர். ஆனால் நாட்டை சரியான திசை யில் திருப்பும் தேவைக்காக அரசியல் மாற்றத்தை செய்து நாட்டை மீட்டெடுக்க ஒருபோதும் பின்னிற்க மாட்டோம்.
அதில் மாநாயக்க தேரர்களின் பங்களிப்பையே எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று முன்தினம் திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் உரையாற்றுகையில்
இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க சர்வதேச நீதிபதிகளை வரவழைக்க வேண்டும் என கூறுகின்றனர். சிலர் தேசிய வாதம் பேசிக்கொண்டு ஜெனிவா சென்று அங்கு எமது நடவடிக்கைகளை காட்டிகொடுத்துள்ளனர். சர்வதேச நீதிபதிகளை அனுப்புங்கள் இலங்கையில் சகல அனுமதிகளையும் வழங்குகின்றோம் என இவர்கள் கூருகினனர்.
இந்த அனுமதியை அடுத்தே சர்வதேச விசாரணையாளர்கள் இலங்கைக்கு வந்தனர். என்னிடமும் வந்தனர். ஆனால் நான் அவர்களின் காரணிகளை காதில் கேட்கவில்லை. அவர்களை விரட்டிவிட்டேன். எமது இராணுவத்தை தண்டிக்க நினைக்கும் சர்வதேச தரப்பினருக்கு இடமளிக்க முடியாது என நான் கூறும்போது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் என்னை இனவாதியாக சித்தரிக்கின்றனர். சர்வதேச விசாரணைக்கு நான் தடையாக உள்ளதாலேயே என்னை இலக்கு வைத்து விமர்சித்து வருகின்றனர்.
மேலும் நீதிமன்ற சுயாதீனத்தில் அரசியல் தலையீடுகள் இருக்க கூடாது அதற்கு நீதி அமைச்சு அனுமதிக்காது என நான் கூறும்போதும் நான் இனவாதி என கூருகினனர். சிங்கள மக்கள் தொடர்பில் அவர்களின் உரிமைகளை பற்றி பேசும்போது நாம் இனவாதி ஆகின்றோம். பெளத்த சாசனத்தை பாதுகாக்க குரல் எழுப்பும் நபர்களை இனவாதி என சித்தரிக்க பழகியுள்ளனர். ஆனால் இவ்வாறு எம்மை சித்தரிக்கும் நபர்களை பொறுத்தவரையில் நாம் இனவாதிகளாக இருக்கின்றோம் ஆனால் எமக்கான கடமைகளை நாம் சரியாக செய்கின்றோம். அதில் ஏற்படும் முரண்பாடுகளை சகல வகையிலும் எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம்.
எமது சொத்துக்களை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை கையில் எடுத்துள்ளோம். எனவே இந்த காலத்தில் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும், எமது நிலங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இன்று நாம் மிகவும் இறுக்கமான காலத்தில் வாழ்ந்துகொண்டு உள்ளோம். நாட்டையும் தேசியத்தையும் பாதுகாக்க பெளத்த சங்கத்தினர் முன்வரவேண்டிய காலம் வந்துள்ளது. பெளத்த மாநாயகர்கள் தலைமை ஏற்கவேண்டிய காலம் வந்துள்ளது. எமக்குள் பிரச்சினைகள் உள்ளன, அரசியல் குழப்பங்கள் உள்ளன. ஆனால் நாம் அவற்றை தீர்க்க வேண்டும். இந்த நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு மிக முக்கியமான பொறுப்புகள் உள்ளன. நாட்டின் உண்மையான தேசிய அரசியல் வாதிகள் யார் என்பதை இவர்கள் அடையாளம் காணவேண்டும். நாட்டை நேசிக்கும் நபர்கள் யார் என்பதை அடையாளம் காணவேண்டும். மாறாக எவரதும் தனிப்பட்ட தேவைகளை அரசியல் நோக்கமாக மாற்றக்கூடாது.
நாட்டில் டெங்கு நோய் அனைவரையும் பாதித்து அதிக உயிரிழப்புகள், லட்சக் கணக்கான மக்கள் பாதிகப்பட்ட போதிலும் சுகாதார அமைச்சருக்கு சைட்டம் நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே பிரதான நோக்கமாகும்.நாட்டில் கற்ற சமூகம் வளர்ச்சி காணாவிட்டாலும் பரவாயில்லை சைட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தனிப்பட்ட காரணிகளை அவர் சிந்திக்கின்றார். இன்று சட்டத்தரணிகள் சங்கத்தையும், நீதி மன்றத்தையும் சுகாதார அமைச்சர் கட்டுபடுத்த முயற்சிக்கின்றார். அப்படியாயின் சுகாதார அமைச்சின் வேலைகளை யார் செய்வது?
70 ஆண்டுகாலமாக கட்சி அரசியலில் செய்ய முடியாததை தேசிய அரசாங்கத்தில் செய்யவே இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்தன. ஆனால் தேசிய அரசாங்கத்தில் நாட்டுக்கு தேவையான நகர்வுகள் இடம்பெறவில்லை. ஆகவே அதற்கான மாற்று நகர்வுகள் என்னவென்பதை இந்த நாட்டின் மாநாயக தேரர்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த நாட்டு மக்களும் சரியான அரசியல் பாதையை தெரிவுசெய்ய வேண்டும்.
ஆளத் தெரியாதவர்கள் ஆட்சியை கையில் எடுத்தால் நாடு சீரழியும் என்ற பழைய கருத்துக்கு அமைவாக இன்றும் ஆட்சி நடத்து வருகின்றது. அதற்கான தண்டனையை இன்றும் நாம் அறிந்து வருகின்றோம். ஆகவே இந்த காலத்தில் மீண்டும் அரசியல் மாற்றத்தை செய்து நாட்டை மீட்டெடுக்க ஒருபோதும் பின்னிற்க மாட்டோம். அரசியலில் நியாயமான வகையில் நான் ஈடுபட்டு வருகிறேன். எவரது தனிப்பட்ட தேவைக்காக என்னால் அரசியல் செய்ய முடியாது என்றார்.
Post a Comment