Ads (728x90)

7.09.2017 முதல் 17.10.2017வரை:-

எதிலும் புரட்சிகரமாக சிந்தித்து யதார்த்தமான முடிவுகள் எடுக்கும் நீங்கள், பண்பாடு கலாச்சாரத்தை மீறாதவர்கள். குருபகவான் 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். அறிஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வாகனப் பழுது நீங்கும். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். யோகாதிபதி புதன் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் பிள்ளைகளின் திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடிக் கொண்டே போகும்.

சூரியன் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் நுழைந்திருப்பதால் திடீர் பயணங்கள் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசு தொந்தரவுகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வழக்கு சாதகமாகும். 6ம் வீட்டில் ராகு தொடர்வதால் ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் அதிரடி மாற்றம் உண்டாகும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். செவ்வாய் சாதகமாக இல்லாததால் எதிலும் ஒருவித பயம் இருக்கும். எங்குச் சென்றாலும் எதிர்ப்புகள் அதிகரித்ததைப் போல உணர்வீர்கள். உங்களுக்கு தலைக்கணம் அதிகமாகி விட்டதாக முணுமுணுப்பார்கள். முன்கோபம் வேண்டாமே. மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். சகோதரங்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.

உங்கள் ராசிநாதன் சனிபகவான் ராசிக்கு 10ல் நிற்பதால் பெரிய பதவிகளுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். அரசியல்வாதிகளே! உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். பள்ளி, கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். மாணவ, மாணவிகளே! விளையாட்டு, படிப்பு என்று அனைத்திலும் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்களால் அவ்வப்போது குடைச்சல் இருந்தாலும் பிரச்னைகள் பெரிதாக இருக்காது. பெட்ரோல், டீசல், செங்கல் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் தொல்லைகள் அகலும். உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். உங்களிடம் பொறாமைப்பட்டுக் கொண்டிருந்த சக ஊழியர்கள் உங்களின் பரந்த மனசை புரிந்து கொள்வார்கள். குறைக் கூறியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினரே! வதந்திகள் ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் உங்களின் விடாமுயற்சியால் சாதித்துக் காட்டுவீர்கள். விவசாயிகளே! புதிதாக நிலம் வாங்குமளவிற்கு வருமானம் உயரும். வாய்க்கால் வரப்புச் சண்டை தீரும். திடீர் யோகங்களையும், அதிரடி முன்னேற்றங்களையும் சந்திக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 17, 18, 19, 25, 26, 27, 28 மற்றும் அக்டோபர் 5, 6, 7, 8, 13, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

அக்டோபர் 17ந் தேதி பிற்பகல் 1.43 மணி முதல் மற்றும் செப்டம்பர் 20ம் தேதி காலை 6.16 மணி முதல் 21, 22ம் தேதி பிற்பகல் 1.28 மணி வரை கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.  

பரிகாரம்:

 ஜீவசமாதிக்கு சென்று வாருங்கள். சாலையோரப் பணியாளர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget