
மற்றவர்களின் மனம் புண்படும்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதில் அதிக ஆர்வம் காட்டும் நீங்கள், கலகலப்பாக சிரித்துப் பேசி எதிரியையும் தன்வயப்படுத்துவீர்கள். உங்கள் ராசிக்கு யோகாதிபதியான புதனும், சுக்கிரனும் இந்த மாதம் முழுக்க வலுவான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்ப பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். சொன்ன தேதியில் கடனைத் திருப்பித் தருவீர்கள். எதிர்ப்புகள் குறையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை அமையும். கணவன்மனைவிக்குள் அனுசரித்துப் போவீர்கள். மனம் விட்டுப் பேசி பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நண்பர்கள் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள்.
வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி பெருகும். உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் சூரியன் நுழைந்திருப்பதால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனத்தாங்கல் வரக்கூடும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தந்தைவழி உறவினர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உங்கள் ராசிநாதன் சனிபகவான் 11ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பெரிய சவால்களில் வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய தனித்திறனும், ஆளுமைத் திறனும், நிர்வாகத் திறனும் அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். இயக்கம், சங்கம் இவற்றில் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குரு 10ல் தொடர்வதால் சின்ன சின்ன அவமானம், எதிர்காலம் குறித்த கவலைகள், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமை போன்றவை நிகழக்கூடும்.
13ந் தேதி வரை செவ்வாய் 8ல் மறைந்திருப்பதால் வாகனத்தில் செல்லும் போது மறவாமல் தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்படும். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். தாயாருடன் மோதல்கள், அவருக்கு முதுகுத் தண்டில் வலி, கணுக்கால் வலி, மூச்சுத் திணறல் வந்து போகும் ஆனால் 14ந் தேதி முதல் செவ்வாய் 9ம் வீட்டில் நுழைவதால் விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். தடைகள் விலகும். தாயாரின் ஆரோக்யம் சீராகும். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சித்து பேசாதீர்கள். கன்னிப் பெண்களே! நட்பு வட்டம் விரிவடையும். பெற்றோர் பாசமழை பொழிவார்கள். மாணவமாணவிகளே! உங்களின் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். புதிய நண்பர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.
வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். கட்டிட உதிரி பாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் வகைகள், சமையலறை சாதனங்கள் மூலமாக லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் உஷாராகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். கலைத்துறையினரே! உங்களின் சம்பளம் உயரும். விவசாயிகளே! விளைச்சல் கொஞ்சம் மந்தமாக இருக்கும். நெல், வாழை வகைகளால் ஆதாயமடைவீர்கள். சின்ன சின்ன ஏமாற்றங்கள், ஆரோக்ய குறைவு, செலவினங்களை தந்தாலும் ஒரளவு நன்மைகளையும் தரும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 23, 24, 25, 26, 27 மற்றும் அக்டோபர் 1, 2, 3, 4, 5, 6, 11, 12, 13
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 15ம் தேதி காலை 8.53 மணி முதல் 16, 17ம் தேதி பிற்பகல் 1.43மணி வரை மற்றும் செப்டம்பர் 18, 19, 20ம் தேதி காலை மணி 6.16 வரை யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.
பரிகாரம்:
விநாயகரை தரிசித்து வாருங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று இயன்ற வரை உதவுங்கள்.
Post a Comment