Ads (728x90)

லண்டன் சுரங்க ரயிலில் குண்டு வெடித்த சம்பவத்துக்கு ஐஎஸ்  தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில், தாக்குதலில் தொடர்புடைய 18 வயது இளைஞரை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்துள்ளனர். இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில்  உள்ள பர்சான் கிரீன் ரயில் நிலையத்தில் இருந்து ேநற்று முன்தினம் காலை  புறப்பட்ட சுரங்க ரயிலில் பக்கெட்டில்  வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு  வெடித்து சிதறியது. இதில், 29 பயணிகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், குண்டு  வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அந்த ரயில் நிலையம் தற்காலிகமாக  மூடப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், தாக்குதலில் தொடர்புடைய 18 வயது இளைஞர் ஒருவரை கென்ட் பகுதி போலீசார் நேற்று காலை கைது செய்தனர். அவர் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கென்ட் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார். பின்னர், அவர் தெற்கு லண்டன் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் தொடர்பாக போலீஸ் உதவி  கமிஷனர் மார்க் ராவ்லே கூறுகையில்,  ரயில் நிலையம் மற்றும் ரயிலில் உள்ள  கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உதவியுடன், துப்பறியும் நிபுணர்கள்  குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். இந்த தாக்குதலுக்கு  பயன்படுத்தப்பட்டது ஐஇடி வகை வெடிகுண்டு என அடையாளம் காணப்பட்டுள்ளது’ என  தெரிவித்தார்.
இந்நிலையில், வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ்  தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.  இதற்கிடையே, பதற்றம் தணிந்ததை தொடர்ந்து  நேற்று அந்த ரயில் நிலையம் மறுபடியும் திறக்கப்பட்டு ரயில் போக்குவரத்து  தொடங்கியது.

இது தொடர்பாக மெட்ரோபாலிட்டன் போலீஸ் துணை உதவி கமிஷனர் மற்றும் தேசிய தீவிரவாத எதிர்ப்பு போலீஸ் படையின் ஒருங்கிணைப்பாளர் நெய்ல் பாசு கூறுகையில், ‘`இந்த வழக்கில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பற்றிய கூடுதல் தகவல்கள் எதையும் தற்போது வெளியிட முடியாது’’ என்றார். இந்நிலையில், போக்குவரத்து வாகனங்களில் ஆயுதம் தாங்கிய ராணுவ  வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget