மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர் ஜுன மகேந்திரன் நேற்று அதிகாலை 1.10 மணி யளவில் சிங்கப்பூர் சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் பிணை முறிமோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக் குழுவில், சிரேஷ்ட மேலதிக சொலிசிற்றர் ஜெனரால் தப்புல டி லிவேரா, அர்ஜுன் மகேந்திரனையும் அர்ஜுன் அலோசியசையும் ஆணைக் குழுவில் ஆஜர் செய்யும் வரை மக்கள் எதிர்ப்பார்த்திருப்பதாக கூறிய நிலையிலேயே அவர் இவ்வாறு சென்றுள்ளார்.
சிங்கப் பூர் நோக்கி பயணமான சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூவ். 469 எனும் விமானத்தில் இவ்வாறு சிங்கப் பூர் நோக்கி சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, தமக்கு அர்ஜுன மகேந்திரன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
அர்ஜுன மகேந்திரன், அலோசியஸ் இந்த விசாரணைகளுக்கு ஆஜராகாமல் இருப்பின் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு விசாரணையை முழுமைப்படுத்த முடியாமல் போகும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Post a Comment