ஜெனிவா மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் 34-1 என்ற பிரேரணையை அமுல்படுத்த இலங்கை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜெனிவாவுக்கான பிரிட்டன் பிரதிநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் நோக்கில் காணாமல் குறித்த அலுவலகத்தை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ள அரசாங்கத்தின் செயற்பாட்டை வரவேற்கின்றோம்.
மேலும் ஜெனிவா மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் 34-1 என்ற பிரேரணையை அமுல்படுத்த இலங்கை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.
இலங்கையானது விசேட நீதிப்பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
30-1 என்ற அந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்நிலையில் இந்த வருடம் மார்ச் மாதம் குறித்த பிரேரணையை அமுல்படுத்த இலங்கைக்கு மேலும் இரண்டு வருடம் கால அவகாசம் வழங்கும் வகையில் 34 - 1 என்ற புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அந்த பிரேரணையை நிறைவேற்ற தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்குமாறே பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.
Post a Comment