இந்தியா போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் வார்னர், ஸ்மித் அரை சதம் அடிக்க ஆஸ்திரேலிய அணி 347 ரன்கள் எடுத்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் 17ல், சென்னையில் நடக்கவுள்ளது. இதற்கு முன், இன்று இந்தியா போர்டு பிரசிடென்ட் லெவன், ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பயிற்சி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.
வார்னர் அரை சதம்:
ஆஸ்திரேலிய அணிக்கு ஹில்டன் டக்–அவுட்டானார். பின், இணைந்த வார்னர், கேப்டன் ஸ்மித் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். வார்னர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் ‘சுழலில்’ ஸ்மித் (55) சிக்கினார். தன் பங்கிற்கு டிராவிட் ஹெட் (65), ஸ்டாய்னிஸ் (76) அரை சதம் அடித்தனர். மேக்ஸ்வெல் 14 ரன்களில் திரும்பினார். ஆஸ்திரேலிய அணி 50 ஒவரில் 7 விக்கெட்டுக்கு 347 ரன்கள் எடுத்தது. பால்க்னர் (8), ஆஷ்டன் ஏகார் (8) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர், படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
Post a Comment