Ads (728x90)

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று (செப்டம்பர் 12-ம் தேதி) தொடங்கும் மூன்று டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாட டுபிளெசிஸ் தலைமையிலான உலக லெவன் அணி லாகூருக்கு பலத்த பாதுகாப்புகளுக்கிடையே வந்து சேர்ந்தது.

இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று காலை அல்லமா இக்பால் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 5 நட்சத்திர விடுதிக்கு உலக அணி வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். வரும் வழியெல்லாம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது, அனைத்துப் பக்கங்களிலிருந்தும் அணி வீரர்கள் பேருந்து வரும் பாதையை எட்ட முடியாமல் போக்குவரத்து மூடப்பட்டிருந்தது.

விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு இல்லை என்று ஏற்கெனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது. கடந்த மார்ச் 2009-ல் இலங்கை அணியினர் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் விளையாட பல்வேறு அணிகள் அச்சம் தெரிவித்து வந்தன.

கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் விளையாடிய போது கூட ஐசிசி ஆட்ட நடுவர்கள், களநடுவர்களை அனுப்ப மறுத்து விட்டது. ஆனால் பாகிஸ்தானுக்கு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் திரும்பும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த உலக லெவன், பாகிஸ்தான் இடையேயான போட்டி ஐசிசி ஆதரவுடன் நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கு இடையே மூன்று டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் ஆட்டம் இன்றும், 2-வது, 3-வது ஆட்டம் 13 மற்றும் 15-ம் தேதிகளில் நடைபெறுகின்றன.

போட்டிகள் அனைத்தும் லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் டி20 ஆட்டத்தை டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

அணி விவரம்

பாகிஸ்தான்: சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), அமீர் யாமின், ஷோயிப் மாலிக், அகமது சேஷாத், பாபர் அசாம், பஹீம் அஸ்ரப், ஹசன் அலி, இமாத் வாசிம், முகமது அமீர், முகமது நவாஸ், ருமான் ரயீஸ், சதப் கான், சோகைல் கான், உமர் அமின், உஸ்மான் கான்.

உலக லெவன்: டுபிளெசிஸ் (கேப்டன்), ஆம்லா, காலின் மில்லர், இம்ரன் தகிர், மோர்னி மோர்கெல், ஜார்ஜ் பெய்லி, டிம் பெய்ன், பென் கட்டிங், தமிம் இக்பால், திசரா பெரேரா, எலியட், பால் காலிங்வுட், டேரன் சமி, சாமுவேல் பத்ரி

Post a Comment

Recent News

Recent Posts Widget