சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இன்று விளையாடுகிறது.ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி, மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் வரும் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ஒன்றில் வாரிய தலைவர் லெவன் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆட்டம் இன்று காலை 10 மணி அளவில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த பயிற்சி ஆட்டத்தை ரசிகர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம். வாரிய தலைவர் அணியில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா ஆகியோருடன் தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், வேகப் பந்து வீச்சாளர் ரகில் ஷா ஆகியோரும் உள்ளனர்.
அணிகள் விவரம்:
ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், கிளென் மேக்ஸ்வெல், டிரெவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஹில்டன் கார்ட்ரைட், மேத்யூ வேட், ஜேம்ஸ் பாக்னர், ஆடம் ஸம்பா, ஜோஸ் ஹசல்வுட், ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ், நாதன் கவுல்டர் நைல்.
வாரிய தலைவர் லெவன்: குர்கீரத் மான்(கேப்டன்), ராகுல் திரிபாதி, மயங்க் அகர்வால், சிவம் சவுத்ரி, நிதிஷ் ராணா, வாஷிங்டன் சுந்தர், கோவிந்தா போடார், , ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, அக்சய் கர்னிவர், கேஜ்ரோலியா, குஷாங் படேல், அவேஷ் கான், சந்தீப் சர்மா, ரகில் ஷா
Post a Comment