
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதிட்டு தவறு செய்தவர்களை தட்டிக் கேட்கும் குணமுடைய நீங்கள், மற்றவர்கள் செய்த உதவியை ஒருபோதும் மறவாதவர்கள். உங்களின் யோகாதிபதியான சூரியன் 10ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். உற்சாகமடைவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புகழடைவீர்கள். வழக்குப் பிரச்னை தீரும். அரசுக் காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடிவடையும். வீடு கட்ட அனுப்பியிருந்த ப்ளான் அப்ரூவலாகும். குருபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். திடீர் செல்வாக்கு, யோகம் உண்டாகும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள்.
சுக்கிரனும் , புதனும் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாகனப் பழுது நீங்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வங்கியில் லோன் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கி அவர்களால் ஆதாயமடைவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். உங்கள் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் சாதகமாக இருப்பதால் உங்கள் பிள்ளைகள் கல்வி, வேலைக்காக அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புறநகரில் ஒருகிரவுண்டு இடம் வாங்குவதற்கான முயற்சிகள் பலிதமாகும்.
ராகு 8லும், கேது 2ம் வீட்டிலும் நிற்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் வேறுவிதமாகப் புரிந்து கொள்ளக் கூடும். எனவே உஷாராக இருங்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுங்கள். மறைமுக எதிரிகள் உருவாகுவார்கள். தண்ணீரை காய்ச்சிக் குடிப்பது நல்லது. வாகனத்தில் கவனம் தேவை. பண விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மாணவமாணவிகளே! அதிக மதிப்பெண் பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.
வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். ஏஜென்சி, மருந்து, உரம், லாஜிஸ்டிக் வகைகளால் லாபமடைவீர்கள். சூரியன் 10ல் அமர்ந்ததால் உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். விவசாயிகளே! மகசூல் அதிகரிப்பதால் சந்தோஷம் நிலைக்கும். அடகு வைத்திருந்த பத்திரங்களை மீட்க உதவிகள் கிடைக்கும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் குறைந்து ஆக்கப்பூர்வமான பாதையில் பயணிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள் :
செப்டம்பர் 20, 21, 22, 23, 30 மற்றும் அக்டோபர் 1, 2, 3, 4, 9, 10, 11, 12
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 13ம்தேதி அதிகாலை 5.42 மணி முதல் 14, 15ந் தேதி காலை 8.53 மணி வரை சலிப்பு, சோர்வு வந்து நீங்கும்.
பரிகாரம்:
காமாட்சியை தரிசித்து விட்டு வாருங்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு இயன்றளவு உதவுங்கள்
Post a Comment