Ads (728x90)

ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, டைனோசர்களை விழுங்கும் திறன் உடைய முதலை இனத்தை, அமெரிக்க தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

வட அமெரிக்காவின், டெக்சாசில் உள்ள துறைமுகப் பகுதியில், டெனேசா பல்கலைக்கழக தொல்லியல் துறையினர் நடத்திய அகழ்வாய்வில், இந்த அரிய இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெனேசா பல்கலைக்கழக பேராசிரியர், ஸ்டெ பனி டிரம்ஹெல்லர் ஹார்ட்டர் கூறியதாவது: பூமியில், 9.5 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த, இந்த முதலை இனத்துக்கு, தன், 15வது வயதிலேயே கண்டுபிடித்த ஆய்வாளர், ஆஸ்டின் மத்ரலின் பெயருடன் சேர்த்து, 'டெல்டாசூயஸ் மத்ரல்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த இனத்தை சேர்ந்த முதலைகள், ஆமை முதல் டைனோசர் வரை, அனைத்தையும் உண்ணும் திறன் உடையவை. இவற்றின் நீளம், 20 அடி. இவற்றின் படிமங்களுக்கு அருகில் கிடைத்துள்ள விலங்குகளின் எலும்புகள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

Post a Comment

Recent News

Recent Posts Widget