சீனாவின் 4-வது ஹெலிகாப்டர் கண்காட்சி நாட்டின் வடகிழக்கில் உள்ள தியாஜின் நகரில் நடந்தது. சீன அரசின் விமான நிறுவனம் முதல் முறையாக ஏவி500டபிள்யூ ரக ஆளில்லா மற்றும் போர் மற்றும் உளவு ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளது. இந்த ஹெலிகாப்டர்களை கண்காட்சியில் சீனா அறிமுகப்படுத்தியது. மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் 4 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்கும்.இந்த வகை ஹெலிகாப்டர்களை வெளிநாடுகளுக்கு விற்க சீனா முடிவு செய்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலில் மட்டுமே ஆளில்லா ஹெலிகாப்டர்கள் உள்ளன. எனவே சீனாவிடம் இதை வாங்க பல நாடுகள் ஆர்வமாக உள்ளன என்று சீனா தெரிவித்துள்ளது.
Post a Comment