தொகுதிவாரி முறைமை 50 சதவீதமும், விகிதாரசாரப் பிரதிநிதித்துவம் 50 சதவீதமுமாகக் கொண்ட கலப்பு முறையிலேயே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், வேட்புமனுத் தாக்கலின் போது 25 சதவீதம் பெண் களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டவரைவில் நேற்றுத் திருத்தங்கள் செய்யப்பட்டே நிறைவேற்றப்பட்டது.60 சதவீதம் தொகுதிவாரி முறையிலும், 40 சதவீதம் விகிதாசாரப் பிரதிநித்துவ முறையிலுமாக அமைந்த கலப்பு முறையில் நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்த ஏற்கனவே இணக்கம் காணப்பட்டிருந்தது.
இதே அடிப்படையிலேயே மாகாண சபைத் தேர்தலையும் நடத்த ஏற்பாடு செய்யும் வகையில், மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டவரைவில் சரத்துக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், மனோ கணேசன் ஆகியோர் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். தலைமை அமைச்சர் ரணிலைச் சந்தித்துக் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தனர்.
இதனையடுத்து, 50 இற்கு 50 அடிப்படையில் கலப்பு முறையில் தேர்தலை நடத்தும் வகையில் சட்டவரைவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment