Ads (728x90)

கொரியா ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். அரை இறுதியில் சீனாவின் ஹி பிங்ஜியாவோவுடன் (7வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து, முதல் செட்டில் அதிரடியாக புள்ளிகளைக் குவித்து 21-10 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடிய பிங்ஜியாவோ 21-17 என வென்று பதிலடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.

இதில் பதற்றமின்றி உறுதியுடன் விளையாடிய சிந்து 21-10, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் ஜப்பான் வீராங்கனை நஸோமி ஓகுஹரா 21-17, 21-18 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை அகானே யாமகுச்சியை (2வது ரேங்க்) வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் சிந்து - ஓகுஹரா மோதுகின்றனர். சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரின் பைனலில் சிந்துவை வீழ்த்தி ஓகுஹரா தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. அந்த தோல்விக்கு கொரியா ஓபனில் சிந்து பழிதீர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget