ஆசிய கோப்பை ஹாக்கி போட்டித் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேச தலைநகர் தாகாவில் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடருக்கு, மன்பிரீத் தலைமையில் மொத்தம் 18 வீரர்கள் அடங்கிய இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. எஸ்.வி.சுனில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அனுபவ வீரர்கள் சர்தார் சிங், ஆகாஷ்தீப் சிங், சத்பிர் சிங் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, லீக் சுற்றில் ஜப்பான் (அக். 11), வங்கதேசம் (அக். 13), பாகிஸ்தான் (அக். 15) அணிகளை சந்திக்கிறது. கோல் கீப்பர்கள்: ஆகாஷ் சிக்தே, சுராஜ் கர்கேரா. பின்களம்: திப்சன் திர்கி, கோதஜித் சிங், சுரேந்தர் குமார், ஹர்மான்பிரீத் சிங், வருண் குமார். நடுகளம்: எஸ்.கே.உத்தப்பா, சர்தார் சிங், மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங், சுமித். முன்களம்: எஸ்.வி.சுனில், ஆகாஷ்தீப் சிங், ரமன்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், குஜ்ரந்த் சிங், சத்பிர் சிங்.
Post a Comment