உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கிரிப் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து பொறுப்புக்கூறல் பொறிமுறையை மதிப்பீடு செய்யவுள்ளார். நேற்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஐ.நா. விசேட நிபுணர் பப்லோ டி கிரிப் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலே ஐ.நா.விசேட நிபுணர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவரின் இலங்கை தொடர்பான மதீப்பீட்டு அறிக்கை 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும்.
Post a Comment