உலகம் முழுவதும் சுமார் 81.5 கோடி பேர் பசியால் வாடுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 11 சதவீதமாகும். ஆசியாவில் மட்டும் 52 கோடி பேரும் ஆப்பிரிக்காவில் 24 கோடி பேரும் பசியால் வாடுகின்றனர்.உள்நாட்டுப் போர், பருவநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் பசியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. இதுவே பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment