Ads (728x90)

வெஸ்ட் இண்டீசை எதிர்த்து விளையாடப் போகிறோம் என்பதை நினைக்கும்போதே மற்ற அணிகளுக்கு கை உதறலெடுத்த காலம் உணடு. லாயிட், ரிச்சர்ட்ஸ், மார்ஷல், வால்ஷ், கார்னர், அம்ப்ரோஸ்... என்று சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரர்கள் அணிவகுத்த அணி அது. 1983 உலக கோப்பை பைனலில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி நாக் அவுட் செய்த பிறகு, வெஸ்ட் இண்டீசின் சாயம் வெளுக்கத் தொடங்கியது.

வீரர்களுக்கும், கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையிலான மோதல், தேசத்துக்காக விளையாடுவதை விட வருமானத்துக்காக விளையாடுவதைப் பெரிதாக நினைக்கும் போக்கு என்று வீழ்ச்சிக்கான காரணங்கள் ஏராளம். படிப்படியாகக் கீழிறங்கி பாதாளத்தில் வீழ்ந்துவிட்ட அந்த அணி, சமீப காலமாக புதிய எழுச்சி கண்டுவருகிறது.

ஒருநாள், டி20  போட்டிகளில் அலட்சியப்படுத்த முடியாத அணியாக மாற்றியுள்ளதுடன், இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரிலும் அசத்த ஆரம்பித்துள்ளது மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கின்றது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 209 ரன் வித்தியாசத்தில் வென்றதும் கடுமையாக விமர்சித்தவர்கள், 2வது டெஸ்டில் பிராத்வெயிட், ஷாய் ஹோப் இருவரின் அபார ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை பறித்தபோது வாயடைத்துப் போனார்கள்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3வது டெஸ்டில் தோற்றாலும் கடைசி வரை போட்டி கடுமையாகவே இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறார்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget