Ads (728x90)

சிந்து நதி பிரச்னை குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் 2 நாள் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதி தண்ணீரை பங்கிடுவது தொடர்பாக பிரச்னை உள்ளது. சுதந்திரம் அடைந்த பிறகு தொடர்ந்து 9 ஆண்டுகள் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் இருநாடுகளும் சிந்து நதி ஒப்பந்த்தில் கையெழுத்திட்டன. இதற்கு உலக வங்கி உதவி செய்தது. அதைத் தொடர்ந்து சிந்து நதி தொடர்பாக பிரச்னை எழும் போதெல்லாம் உலக வங்கி இருநாடுகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வருகிறது.

சமீபத்தில், ஜீலம் மற்றும் செனாப் ஆறு பகுதியில் சில கட்டுப்பாடுகளுடன் நீர்மின் திட்டங்கள் அமைக்க உலக வங்கியிடம் இந்தியா அனுமதி பெற்றது. அதைத் தொடர்ந்து 330 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அளவில் கிஷன்கங்கா, 850 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய அளவில் ரேட்டில் என்ற இரு நீர் மின்திட்ட பணிகள் இந்தியா சார்பில் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நீர் மின் திட்டங்களுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது தொடர்பாக உலக வங்கியிடமும் பாகிஸ்தான் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சிந்து நதி நீர் பங்கீடு ெதாடர்பாக இருநாடுகளின்  செயலாளார்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை கூட்டம் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் உள்ள உலக வங்கியில் நடந்தது. செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்கள் நடந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு மக்களும் பாதிக்கப்படாத வகையில் நதிநீர் பங்கிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget