
அன்றாட வாழ்வில் ஏற்படும் நெளிவு, சுளிவுகளுக்கு தகுந்தாற்போல் வளைந்து கொடுத்து வாழக்கற்று கொண்ட நீங்கள், எப்பொழுதும் புதுமையை விரும்புவீர்கள். ராகு லாப ஸ்தானத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். சிலர் புதிதாக வீடுகட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். ஷேர் பணம் தரும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ராஜ கிரகங்களான குருவும், சனியும் வலுவாக இருப்பதால் மனோபலம் அதிகரிக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். இளைய சகோதர, சகோதரிகளால் பலனடைவீர்கள். பூர்வீகச் சொத்தை விற்று உங்கள் ரசனைக்கேற்ப வீடு மனை வாங்குவீர்கள். ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்திருந்த சூரியன் இப்போது உங்கள் ராசிக்குள் நுழைந்திருப்பதால் படபடப்பு, முன்கோபம் வரும். அவசரப்பட்டு, உணர்ச்சி வேகத்தில் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். உங்களின் ராசிநாதனாகிய புதன் 22ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள்ளேயே உச்சம் பெற்று அமர்வதால் உற்சாகம் பொங்கும். பணப்புழக்கம் அதிகமாகும். செவ்வாய் சாதகமாக இல்லாததால் வீண் அலைச்சல், செலவுகள், திடீர் பயணங்கள், சகோதர வகையில் மனத்தாங்கல், தூக்கமின்மை வந்து செல்லும்.
சுக்கிரன் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிலர் நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப்பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள். கன்னிப்பெண்களே! கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் புது முயற்சிகளுக்கு பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். மாணவ மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். விளையாட்டு, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசையும் பாராட்டையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். தொழிலை விரிவுபடுத்த லோன் கிடைக்கும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பர். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.
மரவகைகள், ரியல் எஸ்டேட், டிராவல்ஸ், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்களின் சம்பள உயர்விற்காக போராடுவீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கலைத்துறையினரே! கௌரவிக்கப்படுவீர்கள். உங்களுடைய படைப்புத் திறன் அதிகரிக்கும். விவசாயிகளே! பூச்சி, எலித் தொல்லை விலகும். புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். அடுத்தடுத்த வெற்றிகள் தொடரும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 17, 23, 25, 26, 27, 28, 29 மற்றும் அக்டோபர் 3, 4, 5, 12, 13, 14.
சந்திராஷ்டம தினங்கள் :
அக்டோபர் 6ம் தேதி இரவு 9.17 மணி முதல் 7, 8ம் தேதி வரை ஜாமீன் கேரண்டர் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்:
பெருமாளை தரிசியுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
Post a Comment