Ads (728x90)

17.09.2017 முதல் 17.10.2017வரை:-

பொதுவாக சட்ட திட்டங்களை மதிக்கும் நீங்கள், நியாயவாதிகளைக் காப்பாற்ற சில நேரங்களில் குறுக்கு வழியில் யோசிப்பீர்கள். ராசிநாதன் சுக்கிரனும், பாக்யாதிபதி புதனும் இந்த மாதம் முழுக்க சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் தீர்வு தெரியாமல் இருந்த பிரச்னைகளுக்கு தெள்ளத் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. உறவினர், நண்பர்களின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ராசிக்கு லாப வீட்டில் நின்று கொண்டிருந்த சூரியன் இப்போது 12ம் வீட்டில் நுழைந்திருப்பதால் மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருக்கும்.

அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். கோவில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். ஜென்ம குரு தொடர்வதால் கொழுப்புச் சத்துள்ள மற்றும் கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. எளிய உணவுகளை உட்கொள்ளுங்கள். காய், கனிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். சின்னச் சின்ன நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சகோதரங்கள் உதவுவார்கள். கணவன்மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மனைவி உங்களின் புது முயற்சியை பாராட்டுவார்.

வீடு, மனை வாங்குவதும், விற்பதும் லாபகரமாக அமையும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் தாழ்வுமனப்பான்மை, உத்யோகத்தில் ஈகோ பிரச்சனைகள், விமர்சனங்கள் வந்து போகும். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். பெற்றோர் உங்களுக்கு முழு உரிமை தருவார்கள். மாணவ மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களிடம்  உணவு, ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.

நண்பர்களின் உதவியுடன் கடையை நவீன மயமாக்குவீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களால் மறைமுக அவமானங்கள் வரக்கூடும். அலுவலக ரகசியங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்துங்கள். கலைத்துறையினரே! உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். விவசாயிகளே! மகசூலை அதிகப்படுத்த நவீன ரக உரங்களை கையாளுவீர்கள். புது இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். விடாமுயற்சியாலும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையாலும் சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 17, 18, 19, 25, 26, 27, 28, 29 மற்றும் அக்டோபர் 1, 3, 5, 6, 7, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

அக்டோபர் 9, 10 ஆகிய தேதிகளில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

குருபகவானை தரிசித்து வாருங்கள்

Post a Comment

Recent News

Recent Posts Widget