Ads (728x90)

17.09.2017 முதல் 17.10.2017வரை:-

தடைகள் பல வந்தாலும் தளராமல் போராடி முன்னேறத் துடித்துக் கொண்டிருக்கும் நீங்கள், மற்றவர்களின் உதவியின்றி சொந்த உழைப்பால் சிகரத்தை எட்டிப் பிடிப்பவர்கள். உங்கள் ராசிநாதனாகிய செவ்வாய் பகவான் இந்த மாதம் முழுக்க உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு உண்டு. அரைகுறையாக நின்று போன பல காரியங்கள் விரைந்து முடியும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வழக்கு சாதகமாக திரும்பும். பழைய கடனை தீர்க்க புதுவழி யோசிப்பீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சூரியன் வலுவாக அமர்ந்ததால் சிலருக்கு பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு.

கட்டிட வேலையைத் தொடங்குவீர்கள். மூத்த சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஏழரைச் சனி தொடர்வதால் யாராக இருந்தாலும் இடைவெளிவிட்டு பழகுவது நல்லது. திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். திடீர் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள். மனைவிக்கு தெரியாமல் வெளியில் எந்த செயலையும் செய்ய வேண்டாம். அதனால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். புதனும், சுக்கிரனும் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் வி.ஐ.பிகள் வீட்டு விஷேங்களில் கலந்து கொள்வீர்கள். கேது 3ம் இடத்தில் தொடர்வதால் துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

குரு 12ல் மறைந்திருப்பதால் தடைப்பட்ட வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கன்னிப்பெண்களே! பெற்றோருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். ஆடை, அணிகலன் சேரும். மாணவ மாணவிகளே! கல்யாணம், காது குத்து என்று விடுப்பு எடுக்காமல் படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் கேள்வி கேட்க தயக்கம் வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விளம்பர யுக்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம் கடையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்வீர்கள்.

வேலையாட்களிடம் கறாராக இருங்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்துப் போங்கள். நகை, ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மூலம் லாபம் வரும். உத்யோகத்தில் பரபரப்பாக காணப்படுவீர்கள். சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். மேலதிகாரியின் ஆலோசனையின்றி புது முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களையும் கற்றுத் தெளிவீர்கள். விவசாயிகளே! குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். அரசாங்க சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். டிராக்டர், களப்பையெல்லாம் புதிதாக வாங்குவீர்கள். கடின உழைப்பால் உங்களின் இலக்கை நோக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.    

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 18, 19, 20, 21, 28, 29, 30 மற்றும் அக்டோபர் 1, 2, 3, 4, 7, 8, 15, 16, 17

சந்திராஷ்டம தினங்கள் :

அக்டோபர் 11, 12, 13ம் தேதி அதிகாலை 5.42 மணி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்:

 பைரவரை தரிசியுங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget