அரசால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படும் 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு பொது வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை என்று நீதிமன்றம் வியாக்கியானம் கூறுமாயின் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 9ஆம் திகதி மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம்.இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
20 ஆவது திருத்த வரைவுக்குப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா? அல்லது நாடாளுமன்றத்திலுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் அதனை நிறைவேற்ற முடியுமா என்பது தொடர்பிலான நீதிமன்ற வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
இந்த வியாக்கியானத்தில் பொது மக்கள் கருத்துக் கணிப்பு நடத்த தேவையில்லையென கூறப்படுமாயின் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வேட்பு மனுக் கோரி கட்டாயமாக தேர்தல் நடத்துவதற்கு ஒரு தினத்தை அறிவிக்கப்பட வேண்டியுள்ளது என்றார்.
Post a Comment