மெக்சிகோவில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் அது 6.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. மேடியாஸ் ரொமிரோ நகருக்கு வடக்கே 12 கிமீ தூரத்தை மையமாக கொண்டு 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் தஞ்சம் அடைந்தனர்.நிலநடுக்கம் காரணமாக சில கட்டிடங்கள் இடிந்துள்ளன. இது தவிர ஒக்சாகா மாகாணத்தில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.1 ரிக்டர் முதல் 5.8 புள்ளிகள் வரை பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் பற்றி உடனடியாக தெரியவில்லை. கடந்த 4 நாட்களுக்கு முன் மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 300 பேர் பலியாகியிருந்தனர். முன்னதாக கடந்த 7ம் தேதி 8.1 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 90 பேர் பலியாகினர்.
இதேபோல் வடகொரியாவில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகொரியாவில் இந்த மாதம் தொடக்கத்தில் நடந்த அணுகுண்டு சோதனை மையம் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மற்றொரு அணுகுண்டு சோதனையை வடகொரியா நடத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே வார்த்தை போர் அதிகரித்துள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Post a Comment