ஜப்பானில் நடைபெற்று வரும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி தகுதி பெற்றார். அரை இறுதியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசாவுடன் நேற்று மோதிய வோஸ்னியாக்கி 6-2, 6-0 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார்.இப்போட்டி 1 மணி நேரத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு அரை இறுதியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 0-6, 7-6 (7-4), 4-6 என்ற செட் கணக்கில் அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவாவிடம் (ரஷ்யா) போராடி தோற்றார். இறுதிப் போட்டியில் வோஸ்னியாக்கி - பாவ்லியுசென்கோவா இன்று மோதுகின்றனர்
Post a Comment