Ads (728x90)

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 21ஆம் தேதி அட்லியின் பிறந்த நாளில் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டீசர் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைபோலவே சற்றுமுன்னர் இந்த டீசர் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த போஸ்டரில் விஜய் வேட்டி சட்டையில் கம்பீரமாக காளையின் மீது கைவைத்துள்ளார். அவருக்கு அருகில் ஒரு ஆண் குழந்தையை கையில் கையில் வைத்தபடி நித்யாமேனன் உட்கார்ந்திருக்கின்றார். அந்த குழந்தை இந்த படத்தின் மகன் விஜய்யாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டரை பார்த்தவுடன் டீசரை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget