Ads (728x90)

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஸ்டைலான பேட்டிங், துணிச்சல், ஆக்ரோஷமான அணுகுமுறை என விராட் கோஹ்லியிடம் உள்ள ஒவ்வொரு சிறப்பம்சமும் ரசிகர்களை ஈர்க்கிறது.

 இந்தியாவின் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தானில் கூட விராட் கோஹ்லிக்கு கணக்கிட முடியாத எண்ணிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். பாகிஸ்தான்-உலக லெவன் இடையே, லாகூரில் சமீபத்தில் நடைபெற்ற டி20 போட்டிகளின்போது, இதை உணர முடிந்தது. விராட் கோஹ்லி, டோனி போன்ற இந்திய வீரர்கள், உலக லெவன் அணியில் இடம் பெறாத ஏக்கம், மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் காட்டிய பேனரில் வெளிப்பட்டது.

இதை எல்லாம் விட, 3வது மற்றும் கடைசி டி20 போட்டியின்போது, மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் போலீஸ்காரர் ஒருவர் ஒரு படி மேலே போய்விட்டார். காரணம் அவர் கையில் ஏந்தியிருந்த பேனரும், அதில் எழுதப்பட்டிருந்த வாசகமும்தான். ‘’கோஹ்லி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்!’’ என்பதுதான் பேனரில் எழுதப்பட்டிருந்த வாசகம். எல்லை கடந்து விராட் கோஹ்லி எவ்வளவு புகழ் பெற்றுள்ளார் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம் மட்டுமே.

இருப்பினும் அந்த போலீஸ்காரர் பேனரை தன் கைப்பட எழுதினாரா? என்பதற்கான உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த புகைப்படம் இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விரைவில் விராட் கோஹ்லியையும் சென்றடையும். போலீஸ்காரரின் ‘ப்ரபோஸலுக்கு’ விராட் கோஹ்லியிடம் இருந்து எப்படி பதில் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

* பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த உமர் திராஸ் என்பவர் விராட் கோஹ்லியின் தீவிர ரசிகர். விராட் கோஹ்லி மீது கொண்ட அன்பின் காரணமாக, தன் வீட்டில் இந்திய தேசிய கொடியை ஏற்றினார். இதற்காக கடந்த ஆண்டு தொடக்கத்தில் உமர் திராஸை பாகிஸ்தான் அரசு கைது செய்தது.

* இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீராங்கனை டேனியலி ைவட் கூட ஒரு முறை, ‘’கோஹ்லி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்’’ என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget