Ads (728x90)

* ஆஸ்திரேலிய அணியுடன் 2வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் நேற்று கொல்கத்தா சென்றனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விக்கெட் கீப்பர் டோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் வீரர்கள் உற்சாகமாக வருகின்றனர்.

* இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடர்களில் இனி அதிகபட்சமாக 3 போட்டிகள் மட்டுமே இடம்பெறும் வகையில் புதிய விதிமுறையை கொண்டுவர ஆலோசித்து வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைமை செயலதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் தெரிவித்துள்ளார். 13 அணிகள் கொண்ட ‘குளோபல் லீக்’ அமைப்பை அறிமுகம் செய்வதற்கான முன்முயற்சியாக இது இருக்கும். எனினும், போட்டிகளின் எண்ணிக்கை குறித்து சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்கள் ஆலோசித்து முடிவு செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

* ஜப்பான் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. இந்த தொடரின் பிரதான சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர், வீராங்கனைகள் சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து, கிடாம்பி காந்த், எச்.எஸ்.பிரனாய், சாய் பிரனீத் உள்பட பலர் களமிறங்குகின்றனர். கொரியா ஓபன் சூப்பர் சீரீசில் தங்கப் பதக்கம் வென்ற சிந்து, இந்த தொடரிலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

* சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு டி/எல் விதிப்படி ஓவர்கள் குறைக்கப்பட்ட நிலையில், கொல்கத்தாவில் நடக்க உள்ள 2வது போட்டியும் மழை காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வானிலை ஆய்வு மைய அறிக்கையின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஈடன் கார்டன் மைதானம் முழுவதும் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.

* இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் ஒருநாள் போட்டி மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்ட் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.00 மணிக்கு தொடங்குகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget