Ads (728x90)

நிபிறு’ என்ற கோள் நாளை மறுதினம் (23) பூமியைக் கடந்து செல்லவுள்ளதாகவும், இதன் தாக்கத்தால் உலகின் அழிவுக் காலம் ஆரம்பமாகும் என்று டேவிட் மெடே தெரிவித்துள்ளார்.

தன்னை ஒரு ஆய்வாளராகப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் இவரது கருத்து, இலட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

‘நிபிறு’ என்று ஒரு கிரகம் இல்லை என நாஸா மறுத்துள்ள நிலையில், உலகின் அழிவை மக்களிடம் இருந்து மறைக்கவே நாடகமாடுகிறது நாஸா என்றும் டேவிட் தெரிவித்துள்ளார்.

நாளை மறுதினம் நிபிறுவை ஜெருசலேம் ஆகாயப் பகுதியில் வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும், நிபிறுவின் ஈர்ப்பு சக்தி பூமியில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ள டேவிட், அடுத்த ஏழு வருடங்களுக்குள் உலகம் அழியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget